Sunday, November 30, 2008

சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே...

சந்தோஷமோ சஞ்சலமோ, அவள்தானே எல்லாம்? அதென்னவோ இப்போ அவள் பாட்டு போடணும்னு தோணுச்சு. அன்னையின் திருவடிகள் சரணம்.



சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!
சக்தி உன்னை மனம் நாடையிலே - என்
துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!

அன்னை உந்தன் பெயர் சொல்லையிலே - எண்ண
மெல்லாம் நிறையுது அன்பினிலே!
அன்னை உன்னை மனம் நாடையிலே - என்
ஊழ்வினை ஓடுதுன் பார்வையிலே!

தேவி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
தேறுதல் பிறக்கு துள்ளத்திலே!
தேவி உன்னை மனம் நாடையிலே - என்
தேடுதல் தீர்ந்த தின்னாளினிலே!

துர்க்கை உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சொர்க்கம் தெரியுது கண்களிலே!
துர்க்கை உன்னை மனம் நாடையிலே - வாழும்
மார்க்கம் ஒளிருதென் நெஞ்சினிலே!!

--கவிநயா

18 comments:

  1. படிக்க படிக்க
    பரவசம் அடைகிறது
    உள்ளம்

    ReplyDelete
  2. திகழ்மிளிர் said...
    //படிக்க படிக்க
    பரவசம் அடைகிறது
    உள்ளம்//

    எனக்குப்
    படிக்கப் படிக்க
    சக்தி பெருகுகிறது
    வெள்ளமாய்..

    நன்றி கவிநயா.

    ReplyDelete
  3. தேவி உந்தன் பெயர் சொல்கையிலே - ஒரு
    தேறுதல் பிறக்கு துள்ளத்திலே!
    தேவி உன்னை எண்ணிப் பாடுகையிலே என்
    தேடுதல் தீர்ந்த தின்னாளினிலே!

    --சிறப்பாக, ராகத்துடன் பாடுதலுக்கு
    வசப்பட்டு இருக்கிறது.

    எல்லா இடங்களிலும், 'சொல்கையிலே'
    'பாடுகையிலே' என்று இருந்திருக்கலாமோ?

    (பிரசுரத்திற்கு அல்ல)

    ReplyDelete
  4. அக்கா
    இந்தக் கவிதை அம்மன் பாட்டுக்குச் சொந்தமானது! அதை இங்கே இட்ட உங்களைக் கன்னா பின்னான்னு கண்டிக்கிறேன்! :)

    ReplyDelete
  5. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!

    ReplyDelete
  6. பரவாயில்லை ஜீவி ஐயா. கேஆரெஸ்ஸும் சொன்னாரு. இப்ப

    "உன்னை மனம் நாடையிலே"ன்னு மாத்திட்டேன். இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  7. //படிக்க படிக்க
    பரவசம் அடைகிறது
    உள்ளம்//

    மிக்க நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  8. //எனக்குப்
    படிக்கப் படிக்க
    சக்தி பெருகுகிறது
    வெள்ளமாய்..//

    அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  9. //இந்தக் கவிதை அம்மன் பாட்டுக்குச் சொந்தமானது!//

    :) அவ பாட்டை இங்கே போட்டதாலேதானே இப்போ வந்தீங்க :) நன்றி கண்ணா.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  11. //சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே!
    சக்தி உன்னை மனம் நாடையிலே - என்
    துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!//

    ஒம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி

    ReplyDelete
  12. நல்ல சந்தத்தோட இருக்கு அக்கா.

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி கைலாஷி.

    ReplyDelete
  14. //நல்ல சந்தத்தோட இருக்கு அக்கா.//

    மிக்க நன்றி குமரா.

    ReplyDelete
  15. கவிதை அருமை சற்றே சந்த ஓசை நீள்கிறது சற்றே சரி செய்தால் சிறப்பாக இருக்கும்;

    காட்டுக்கு:-

    சக்தி உன்பெயர் சொல்லையிலே - ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே!
    சக்தி உனைமனம் நாடையிலே - என்
    துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!

    ReplyDelete
  16. வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி அகரம்.அமுதா. முயற்சி செய்து பார்க்கிறேன் :)

    ReplyDelete
  17. துர்க்கை உன்னை மனம் நாடையிலே - வாழும்
    மார்க்கம் ஒளிருதென் நெஞ்சினிலே!!

    இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது. வழி காட்டும் ஒளியும், வழியும் அன்னை தானே!

    ReplyDelete
  18. //வழி காட்டும் ஒளியும், வழியும் அன்னை தானே!//

    உண்மை. வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி ரமேஷ்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)