Sunday, July 27, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 5

(முதல் பகுதி; ரெண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நாலாம் பகுதி)

இன்னக்குதான் அந்தப் பொன்னான நாள். எங்க அப்பா அம்மாவப் பொறுத்த வரைக்கும். சாயந்திரம் என்ன பொண்ணு பாக்க வராங்க. யாரு என்னன்னு கேக்காதீங்க. நான் எதுவுமே கேட்டுக்கல. கேட்டு என்ன ஆகப் போகுது அப்படிங்கிற நெனப்புதான். காலைல என்னய வழக்கத்துக்கு மீறி ரொம்ப நேரம் தூங்க விட்டுட்டாங்க எங்கம்மா. எண்ணெயத் தேச்சு ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வந்தேன். என்னய ஒரு வேலயும் பாக்க விடல. “பேசாம இருடி.. வேல பாத்தா டயர்டாயிரும். போய் உக்காரு. நாம் பாத்துக்கிறேன்”ன்னு சொல்லிட்டாங்க. இப்பிடிப்பட்ட அம்மாவுக்காக எதுவும் செய்யலாம்னு தோணுச்சு. நான் செஞ்சதில தப்பில்லன்னு மறுபடியும் தோணிச்சு. ஆனா, இந்த மனசு இருக்கே… அதுதான் மொரண்டு பண்ணிக்கிட்டே இருக்கு.

அதுக்கப்பறமும் நான் அவர நெனக்காம இருந்ததே இல்ல. தேவிகிட்ட கேட்டிருந்தா ஏதாச்சும் சொல்லியிருப்பா அவரப் பத்தி. ஆனா நான் கேட்டுக்கல. அவளும் சொல்லல. ஒரே ஒரு தரம், “ஏய், நாம ரெண்டு பேரும் மாத்ஸ்ல எவ்வளவு வாங்கினோம்னு சுந்தரண்ணா கேட்டாருடி”, அப்பிடின்னா. அதோட சரி.

காலேஜ் போக ஆரம்பிச்சோன்ன மத்த வேலைகள்ல அவர அப்பப்ப நெனக்காம இருந்தாலும், அவர நெனக்கும்போதெல்லாம் கூடவே தாள முடியாத ஒரு ஏக்கமும் வரும். கண்ணெல்லாம் கலங்கிரும். எதையோ எழந்துட்டாப்ல தவிப்பா இருக்கும். எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வச்சுட்டு இயல்பா இருக்க முயற்சிக்கிறதுலயே இத்தன காலமும் ஓடிருச்சு. இப்ப கல்யாணத்த பத்தி பேச்சு வந்தோன்னதான் இதோட முழு பாதிப்பும் என் மனநிலையும் எனக்கே புரிய ஆரம்பிச்சுது.

ஆனா இப்ப என்ன செய்ய முடியும்? தேவிகிட்டயாவது சொல்லியிருக்கலாம்னு தோணுது இப்ப. மனசு பூரா இவ்ளோ அன்பை வச்சுக்கிட்டு… இது என்ன பைத்தியக்காரத்தனம், இது வாழ்க்கைடி… அப்பிடின்னு இந்த மனசு இப்பதான் இடிச்சுக் காட்டுது. எங்க அம்மா அப்பாவும் கண்ண மூடிக்கிட்டு காரியம் பண்ணுறவங்க இல்ல. அதுனால சொல்லித்தான் பாக்கலாமே அப்பிடின்னு தோணுது… இந்த மாப்பிள்ளய புடிக்கலன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட இன்னக்கி ராத்திரியே சொல்லிர வேண்டியதுதான்…

ஆனா… இத்தன வருஷத்துல…ஒரு வேள அவருக்கு… ஏற்கனவே கல்யாணம்… இந்த நெனப்பு வந்தோன்ன என்னால அத தாங்கவே முடியல! கண்ணு ரெண்டையும் இறுக்கி மூடிக்கிட்டு வேகமா தலைய ஆட்டி அந்த நெனப்ப ஒதறித் தள்ளுனேன். அப்பிடி ஏதாச்சும் பெரிய விஷயமா இருந்தா தேவி கட்டாயம் எங்கிட்ட சொல்லியிருப்பா. எப்பிடியும் இன்னக்கி அம்மாகிட்டயும் தேவிகிட்டயும் பேசிர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த தீர்மானம் வந்தப்புறம் கொஞ்சம் நிம்மதியானாப்ல இருக்கு.

“கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னர் முகம் காண்பதில்லை;
கண்ணனுக்குத் தந்த உள்ளம், இன்னொருவர் கொள்வதில்லை…”

சிடில சுசீலாம்மாவும் என் மன நெலைக்கு ஏத்த மாதிரி உருகிக்கிட்டிருக்காங்க…

“மது. போயி மொகத்தக் கழுவிட்டு வா. காப்பி போட்டு தரேன். குடிச்சிட்டு போய் ரெடியாகலாம்”, அம்மா அடுப்படிலருந்தே கொரல் குடுக்கறாங்க.

அம்மா எடுத்துக் குடுத்த பட்டுச் சேலைய கேள்வி கேக்காம கட்டிக்கிறேன். வேலயோட வேலயா அம்மா எந்தல முடியத் தளரப் பின்னி, எனக்குப் புடிச்ச மல்லிகப் பூவ தலை கொள்ளாம வச்சு விடறாங்க. “இந்த வளயலப் போடு, அந்த ஜிமிக்கியப் போடு”ன்னு கவிதா வேற என்னய ஒரேயடியா கவனிக்கிறா. பொட்டு வச்சு, மை எழுதி, கண்ணாடியில என்னய பாத்துக்கிறப்போவும் அவரு மொகம்தான் தெரியுது. இப்ப அவரு என்னயப் பாத்தா என்ன சொல்லுவாருன்னு மனசுக்குள்ள ஓடுது. எப்ப கொஞ்சம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிட்டாலும் அவர் பாக்கலயேன்னு இருக்கும். இன்னக்கும் அப்பிடித்தான்…

என் இஷ்ட தெய்வமான விநாயகர் முன்னாடி போய் கையெடுத்துக் கும்பிடறேன், “எது நடந்தாலும் ஏத்துக்கிற மனப் பக்குவத்தை எனக்குத் தா”, அப்பிடின்னு எப்பவும் போல வேண்டிக்கிறேன். விபூதிய கீத்தா எடுத்து பொட்டுக்கு மேல இட்டுக்கும்போது, “அம்மா. அவங்கல்லாம் வந்துட்டாங்க”, கவிதா உற்சாகத்துல எட்டு வீட்டுக்குக் கேக்குறாப்ல கத்தறா.

“வாங்க வாங்க”, அப்பாவும் அம்மாவும் அவங்கள வரவேற்குறது எனக்கு கேக்குது. கொஞ்ச நேரத்துல என்னயக் கூப்புட அம்மா உள்ள வராங்க. “எங்கண்ணே பட்டுரும் போல இருக்கேடி”ன்னு சொல்லி கண்ணு கலங்க என் கன்னத்த வழிச்சு திருஷ்டி கழிக்கிறாங்க.

அம்மாவோட நான் ஹாலுக்கு போனதும் போகாததுமா அப்பா, “மாப்பிள்ள, இவதான் எம் பொண்ணு மது. அட, பாருங்க, உங்களுக்கே இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்… உங்களுக்குதான் தெரியுமே. மது, இவருதாம்மா மாப்பிள்ள சுந்தர்”, அப்பிடிங்கிறார்!

என்ன! தரையப் பாத்துக்கிட்டு நின்ன எனக்கு தூக்கிவாரிப் போடுது. என் இதயம் துடிக்கிற சத்தம் அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டிருக்குமோ… மெதுவா நிமிந்து அப்பாவப் பாக்கிறேன். அப்பா கண்ணச் சிமிட்டி சிரிக்கிறார். அப்பா பக்கத்துல உக்காந்திருக்கது… அவர்தான்… என்னோட உயிர்த் துடிப்போட ஒண்ணாக் கலந்துட்ட என்னோட அவரேதான்!

மனசு இறைவனுக்கு இடைவிடாம நன்றி சொல்ல, மந்திரிச்சு விட்ட மாதிரி அவரயே, அவரோட அந்த அழகுப் புன்னகை முகத்தையே பாத்துக்கிட்டு நிக்கிறேன்!

***

என்னய மொத மொதல்ல பாத்தோன்னயே அவருக்கும் எம்மேல பிரியம் வந்ததையும், நான் ட்யூஷன விட்டு நின்ன பெறகும் அவரு என்னய மறக்கவே இல்லைங்கிறதையும், தேவி வீடு மூலமா அவரு எப்பவுமே எம்மேல ஒரு கண்ணு வச்சிருந்தாருங்கிறதையும், எனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சோன்ன, தன் அப்பா அம்மாவ விட்டு எங்க வீட்டுல கேக்கச் சொன்னதையும்… இப்படி எல்லாத்தையும் அவர் அவருக்கே உரிய மென்மையான இனிமையான குரல்ல சொல்லச் சொல்ல, வாழ்நாள் பூரா……ம்… கொஞ்சம் இருங்க… என்னவர் கூப்பிடறாப்ல இருக்கு…. வரேங்க… அப்பறம் பாக்கலாங்க…

*சுபம்*


--கவிநயா

33 comments:

  1. சுபமாய் முடிவு அமைந்திருந்ததில், சுகம், சுவை.

    ReplyDelete
  2. அருமை கவிநயா..பாத்தீங்களா நான் அன்னிக்கே கேட்டேன் இப்படித்தானான்னு!!

    சுலபமா கண்டுப்பிடிகிறா மாதிரி இருந்தாலும்,நீங்க கதைய கொண்டுப்போன விதம் ரொம்ப நல்லா இருந்துச்சு :)) வாழ்த்துக்கள் :)

    சுசீலாம்மா பாட்ட வேற மேற்கோள் காட்டி கலக்கறீங்க :))

    ReplyDelete
  3. வரேங்க அப்பறம் பாக்கலாம்னு சொல்லிட்டு போய்ட்டா எப்படி
    வந்தவங்களுக்கு ஒரு ஸ்வீட், போண்டா, காபி தர வேண்டாமா !

    நானும் உக்கார்ந்து உக்கார்ந்து பாத்திட்டிருக்கிறேன்.
    போனவங்க யாருயைமே காணுமேன்னு
    எழுந்திருச்சு அங்கே இங்கே பாத்தா

    அடடா ! இங்கேயில்லெ இருக்காக !!

    http://www.youtube.com/watch?v=zed9Kve-b6I

    மீ.பா.
    தஞ்சை.

    ReplyDelete
  4. ellorum inge seekiram vaanga


    http://www.youtube.com/watch?v=feyWhFYRjZo

    subbu thatha

    ReplyDelete
  5. இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தான் தேவன் அன்றே

    என்று சொன்னது உங்கள் கதையின் முடிவு.உறுதி செய்கிறது.

    சுபம்.

    காதலித்தவரே( மானசீகமாக) கணவராக அதுவும் பெற்றோர்( இரு வீட்டார்) சம்மததுடன் .
    உண்மையில் மது அதிர்ஸ்டக்காரர்தான்.


    நாமும் வாழ்த்து மல்ர்களை தூவி எல்லா வளங்களும் பெற வாழ்த்துவோம்.

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  6. ramaya ramanai asked...
    //பாத்தீங்களா நான் அன்னிக்கே கேட்டேன் இப்படித்தானான்னு!!//

    ஆமாம் ரம்யா, அன்னிக்கே சரியா கேட்டீங்க:)!

    ramaya ramanai said...//சுலபமா கண்டுப்பிடிகிறா மாதிரி இருந்தாலும்,நீங்க கதைய கொண்டுப்போன விதம் ரொம்ப நல்லா இருந்துச்சு :)) வாழ்த்துக்கள் :)//

    இன்னிக்கும் சரியாச் சொன்னீங்க:)!

    மதுவின் மனநிலையோடு நம்மையும் ஒன்றச் செய்து, அருமையா கதையைக் கொண்டு போய் சுபமாக முடித்த கவிநயாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கதையைப் படிச்சதோட மட்டுமில்லாம தொடர்ந்து பின்னூட்டமிட்டு, "அட, கதை ஓரளவு படிக்கிறாப்லதான் இருக்கு போல, தொடரலாம்", அப்படிங்கிற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    பின்னூட்டங்களுக்கு பதிலிட அப்புறமா வரேன் :))

    ReplyDelete
  8. கலக்கிட்டீங்க கவிநயா. யூகிக்க முடிந்த முடிவு தான் என்றாலும் சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். நான் இரண்டாம் அத்தியாயம் படித்தேன் முழுவதும் முடித்த பிறகு பின்னூட்டம் இடலாம் என நினைத்தேன். இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டீர்கள். எனினும் அழகான சுவையான கதை.

    ReplyDelete
  9. நன்றி ராமலஷ்மி மேடம் :))

    ReplyDelete
  10. //சுபமாய் முடிவு அமைந்திருந்ததில், சுகம், சுவை.//

    குட்டிப் பாப்பாவக் கவனிச்சுக்கிட்டே கதையும் படிச்சீங்களா :) மிக்க நன்றி ஜீவா.

    ReplyDelete
  11. //அருமை கவிநயா..//

    நன்றி ரம்யா.

    //பாத்தீங்களா நான் அன்னிக்கே கேட்டேன் இப்படித்தானான்னு!!//

    ஆமா, நீங்க அன்னக்கு கேட்டோன்ன என்னடா இப்பிடி சுலபமா கண்டு பிடிச்சிட்டீங்களேன்னு ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டேன் :( எப்பிடியோ கஷ்டப்பட்டு உங்கள சமாளிக்க வேண்டியதாப் போச்சு, தெரியுமா?

    //சுசீலாம்மா பாட்ட வேற மேற்கோள் காட்டி கலக்கறீங்க :))//

    கதையை விறுவிறுன்னு எழுதிட்டேன்; தலைப்பு வைக்கதான் நேரமாச்சு. சுசீலாம்மா பாட்டுதான் கை குடுத்துச்சு :)

    மீண்டும் உங்களோட ஆர்வமான வாசிப்புக்கு மிக்க நன்றி ரம்யா!

    ReplyDelete
  12. //வந்தவங்களுக்கு ஒரு ஸ்வீட், போண்டா, காபி தர வேண்டாமா !//

    பாட்டீ, நீங்களும் தாத்தாவும் வீடியோவுக்கும் ஏற்பாடு செய்து தேன்நிலவுக்கும் அனுப்பி வச்சுட்டீங்களே! ரொம்ப நன்றி பாட்டீ. திரும்பி வந்து மது உங்களுக்கெல்லாம் பெரீய்ய விருந்து தரேன்னு சொல்லியிருக்கா :)

    ReplyDelete
  13. //நாமும் வாழ்த்து மல்ர்களை தூவி எல்லா வளங்களும் பெற வாழ்த்துவோம்.//

    வாழ்த்துக்கும், தவறாமல் வருகை தந்து ரசித்து பின்னூட்டமிட்டதற்கும் ரொம்ப நன்றி விஜய்!

    ReplyDelete
  14. //மதுவின் மனநிலையோடு நம்மையும் ஒன்றச் செய்து, அருமையா கதையைக் கொண்டு போய் சுபமாக முடித்த கவிநயாவுக்கு வாழ்த்துக்கள்.//

    கதையைத் தொடர்ந்து ரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  15. //கலக்கிட்டீங்க கவிநயா.//

    ரசனைக்கு நன்றி ரமேஷ்!

    //நான் இரண்டாம் அத்தியாயம் படித்தேன் முழுவதும் முடித்த பிறகு பின்னூட்டம் இடலாம் என நினைத்தேன். //

    பின்னூட்டம் இடாமலேயே தொடரைத் தொடர்ந்து படிக்கிறவங்க இருக்காங்கன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் :) நன்றி.

    //யூகிக்க முடிந்த முடிவு தான் என்றாலும் சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். //

    ஊகிக்கக் கூடிய முடிவுன்னு தெரிஞ்சாலும் கதை சொல்ற விதத்தில் சுவாரஸ்யமா சொல்லணும்னு முயற்சி செய்தேன்.

    //இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டீர்கள். //

    இடைவெளி விட்டா கதையைப் படிக்கிறவங்க முந்தின பகுதிகளை மறந்துடுவாங்களோங்கிற எண்ணம்தான். அதோட ரம்யா வேற அவ்ளோ ஆவலா இருந்தாங்களா... அதான்... :))

    ReplyDelete
  16. //kalakkal thodarnga... :)))//

    ஆகா, நீங்களும் தொடர்ந்து படித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி, ஜி! நன்றி.

    ReplyDelete
  17. \\கவிநயா said...
    ஆமா, நீங்க அன்னக்கு கேட்டோன்ன என்னடா இப்பிடி சுலபமா கண்டு பிடிச்சிட்டீங்களேன்னு ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டேன் :( எப்பிடியோ கஷ்டப்பட்டு உங்கள சமாளிக்க வேண்டியதாப் போச்சு, தெரியுமா?
    \\

    அடடே !!ஏதொ ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேனுங்க :(

    \\இடைவெளி விட்டா கதையைப் படிக்கிறவங்க முந்தின பகுதிகளை மறந்துடுவாங்களோங்கிற எண்ணம்தான். அதோட ரம்யா வேற அவ்ளோ ஆவலா இருந்தாங்களா... அதான்... :))\\

    ஆஹா எனக்காக இவ்ளோ சீக்கிரமா போட்டீங்களா "கவிநயா, நெஞ்சம் மறப்பதில்லை உங்கள் அன்பை(!!)" :))

    ReplyDelete
  18. //அடடே !!ஏதொ ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேனுங்க :(//

    அட, ச்சும்மா டமாசு :) அதான் சுபமாயிருச்சே :))

    //"கவிநயா, நெஞ்சம் மறப்பதில்லை உங்கள் அன்பை(!!)" :))//

    :))

    ReplyDelete
  19. கதையை நகர்த்திய விதம் (விவரித்த) அருமை. எளிய தமிழ் சொற்கள். ஒரு குறுகுறுப்பு இருந்தாலும், பெற்றோர்களையும் நினைத்துப் பார்ர்க்கும் பெண்ணின் மனதை அழகே படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  20. வருக சதங்கா. தொடர்ந்து படிச்சதற்கும் ரசிச்சதற்கும் நன்றி!

    ReplyDelete
  21. பகுதி 5 படிச்சாச்சு. :-)

    ReplyDelete
  22. கதையைப் பத்தி கேக்குறீங்களா? அருமை. :-)

    ReplyDelete
  23. //கதையைப் பத்தி கேக்குறீங்களா? அருமை. :-)//

    நன்றி குமரா. ஆனா அதென்ன இம்புட்டு சுருக்கமா முடிச்சிட்டீங்க?

    ReplyDelete
  24. ஒளியமைப்புடன் "ராம நாமம் பாடுவேன்" கேட்டீங்களா?

    ReplyDelete
  25. க.த.உள்ளம் படிச்சுட்டோம்.அருமை.வாழ்த்துக்கள்.எப்படி இப்படி எழுதுற.தொடர்கதையையும் விடுறதா இல்லையா?

    ReplyDelete
  26. //ஆனா அதென்ன இம்புட்டு சுருக்கமா முடிச்சிட்டீங்க?
    //

    காரணமாத் தான். ஆனா இப்ப அதை சொல்லமாட்டேன். :-)

    ReplyDelete
  27. //க.த.உள்ளம் படிச்சுட்டோம். அருமை. வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஜெயா அவர்களே! :))

    ReplyDelete
  28. //காரணமாத் தான். ஆனா இப்ப அதை சொல்லமாட்டேன். :-)//

    அட முருகா! பின்னூட்டத்துல சஸ்பென்ஸ் வச்ச முதல் ஆள் நீங்களாதான் இருக்கும் :) ஹ்ம்ம்... என்ன செய்யறது... காத்திருக்கேன்..

    ReplyDelete
  29. குறுந்தொடர் ஆரம்பித்தது தெரியும்.
    இடையே ஒருவாரம் ஊரில் இல்லையா, முழுதும் ஒருசேரப் படித்துவிடலாம் என்று நினைத்து இன்று படித்து விட்டேன். இப்படி சேர்த்து வைத்துப் படிப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது..

    முதலில் ஒன்றைச் சொல்லி விட வேண்டும்..

    மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களை, நூல் கயிற்றை இழுத்தும், தளர்த்தியும், சுண்டியும் பட்டத்தைப் பறக்க விடுகிற மாதிரி,
    அவசரப்படாமல், தருணம் பார்த்து மெதுமெதுவாக மேலெழுப்புகிற திறன் உங்களிடமிருக்கிறது.. பல இடங்களில் உணர்வுகளின் வெளிப்பாட்டை வெகு அழகாக வார்த்தைகளில் சிறைப் பிடித்திருக்கிறீர்கள்..ஆரம்பத்தில் ஆரெம்கேவி கடையில் சந்தித்து, அடுத்து ஆசிரியராய் சந்தித்து, கடைசியில் தன்னைப் பெண்பார்க்க வருபவராயும் சந்தித்து..ஒவ்வொரு இடத்திலும் வரம்பு விட்டு விலகாமல் அருமையாக வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறீர்கள். அதுவும் அந்தப் பெண், ஆசிரியரிடம் சொல்லிவிட்டுப் போக வரும் இடம் அருமை. ரொம்ப சிக்கலான இடம், மிக மிக இயல்பாகத் தாண்டி அடுத்த அத்தியாத்திற்குப் போகிறது.. இந்த இடத்தில் கொஞ்சமே இருவரில் ஒருவர் வெளிக்காட்டிக் கொண்டிருந்தாலும், கதை நமநமத்துப் போயிருக்கும். காப்பாற்றி விட்டீர்கள்.. முடிவும் கச்சிதம்.
    கவிதைகளில் சக்கை போடு போடும் நீங்கள், கதைகள் புனைவதிலும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
    நல்ல ஒரு கதையைத் தந்தமைக்கு நன்றி, கவிநயா!

    ReplyDelete
  30. வருக ஜீவி ஐயா.

    உங்கள் பின்னூட்டம் மனசுக்கு மிகுந்த நிறைவாய் இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னமாய் ரசித்திருக்கிறீர்கள்! சிறந்த எழுத்தாளராய் மட்டுமின்றி, சிறந்த ரசிகராகவும் இருக்கிறீர்கள். நானும் ரசிப்பேன் என்றாலும், ரசிப்பதை இப்படி அழகாக விரித்துத் தரத் தெரியாது. அதற்கும் தனித் திறமை வேண்டும் என்று உணர்ந்து வருகிறேன். நீங்கள் எழுதியதை பலமுறை படித்தேன். அருமையாய் அலசியிருக்கிறீர்கள்.

    //மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களை, நூல் கயிற்றை இழுத்தும், தளர்த்தியும், சுண்டியும் பட்டத்தைப் பறக்க விடுகிற மாதிரி//

    இதை நீங்கள் சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன் :)

    //கவிதைகளில் சக்கை போடு போடும் நீங்கள், கதைகள் புனைவதிலும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..//

    நன்றி ஐயா. ஆனால் அதென்னவோ இதை எழுதும்போதே நான் இப்படி ஒரு கதை எழுதுவது இதுவே முதலும் கடைசியும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அளவு இந்தக் கதை தானாகவே எழுதிக் கொண்டது என்பதே உண்மை. பார்க்கலாம்.. அவள் திருவுளம் எப்படியோ :)

    நீங்கள் இவ்வளவு தூரம் ரசித்துப் படித்து, விரிவாகப் பின்னூட்டமும் இட்டது குறித்து எனக்கு மிக மிக மகிழ்ச்சி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  31. அருமையான கதை - அருமையான முடிவு....(கொஞ்சம் எதிர்பார்த்ததுதான் - கடேசில மன ஓட்டம் கொஞ்சம் மெகா சீரியல் லெவலுக்கு இஸ்ததிலியே முடிவு தெரிஞ்சு போச்சு)

    ஆனா நல்ல first person narration.

    சொன்னா நம்ப மாட்டிங்க. பிளேன்ல எல்லாம் இந்த பாட்டுதான் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது. Not a song that one can forget easily!

    ReplyDelete
  32. முடிவு தெரிஞ்சாலும் போனாப் போகுதுன்னு படிச்சு முடிச்சதுக்கு நன்றி நாகு :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)