Tuesday, May 27, 2008

அன்பாயிருக்கக் கத்துக்கணும்!

அடுத்த பதிவா அன்பைப் பத்தின இந்தக் கவிதையைப் போடணும்னு ஏற்கனவே யோசிச்சு வச்சிருந்தேன். அன்பு என்பது எவ்வளவு அழகான விஷயம்! இயல்பான விஷயம்! அட, நான் மட்டும் சொல்லலீங்க. நம்ம பாரதியார் கூட அப்படித்தான் சொல்லியிருக்காரு. வேணுன்னா நம்ம எஸ்.கே. அண்ணாவோட பதிவைப் பாருங்க. சொல்லி வச்சாப்ல அவரும் நேத்து இதைப் பத்திதான் எழுதியிருந்தாரு.

அன்பு அழகான, இயல்பான விஷயம் மட்டுமில்லை. வரவர அரிதான விஷயமாகவும் ஆகிக்கிட்டு இருக்கு. இப்ப நாட்டுல, உலகத்துல நடக்கற நடப்புகளையெல்லாம் பார்க்கும்போது ரொம்பவே வேதனையா இருக்கு. மனிதாபிமானம்னா என்ன விலைன்னு கேட்கிற நிலை உருவாகிக்கிட்டிருக்கு :(

அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன்னகை. ஒரு கன்னல் வார்த்தை. அதைப் பிறருக்குத் தருவதில் என்ன சிரமம்? கனியிருக்க ஏன் காய் கவர்ந்துகிட்டே இருக்கோம்? புரியல. ஐயன் அன்புடைமைன்னு ஒரு அதிகாரமே எழுதி வச்சுட்டாரு. அதுக்கு மேல யாரால என்ன சொல்ல முடியும்? நல்ல விஷயங்களை அப்பப்ப நினைவுபடுத்திக்கணுமில்லையா? அதுக்கான சிறிய முயற்சிதான் இதுவும்!

அன்பொன்று செய்து விட்டால் அவனியிலே துயரம் இல்லை! அன்பு செய்வோம்! அதை இன்று செய்வோம்! என்றும் செய்வோம்!




அன்பு

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்!

கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு!

துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை!

இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை!

சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்!

அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்!

அன்பு –

ஒரு அதிசயம்!
அது ஒரு அக்ஷய பாத்திரம்!

எடுக்க எடுக்க நிறையும்!
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!


--கவிநயா

30 comments:

  1. "எடுக்க எடுக்க நிறையும்
    கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!"

    எத்தனை அரிய செய்தியை எத்தனை எளிமையாகச் சொல்லிச் சிறப்பித்திருக்கிறீர்கள் கவிநயா!

    அன்பின் வழியதே உயிர்நிலை!

    அன்பை வளர்ப்போம்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பிழை திருத்தியபின்:

    இன்னா செய்தாரை நன்னயம்

    செய்திட பெருகாதோ அன்பு,

    அதை மறந்தபோது,

    தாழ்ந்ததே நம் பண்பு.

    ReplyDelete
  4. வாங்க அண்ணா!

    //அன்பின் வழியதே உயிர்நிலை!
    அன்பை வளர்ப்போம்!//

    வழிமொழிகிறேன், அண்ணா! உங்களுக்கு நன்றி! :)

    ReplyDelete
  5. //இன்னா செய்தாரை நன்னயம்
    செய்திட பெருகாதோ அன்பு,
    அதை மறந்தபோது,
    தாழ்ந்ததே நம் பண்பு.//

    எப்படி ஜீவா இப்படி 'நச்'சுன்னு சொல்றீங்க? ரொம்ப உண்மை! மிக்க நன்றி உங்களுக்கு!

    ReplyDelete
  6. //இன்னா செய்தாரை நன்னயம்
    செய்திட பெருகாதோ அன்பு,
    அதை மறந்தபோது,
    தாழ்ந்ததே நம் பண்பு.//

    எப்படி ஜீவா இப்படி 'நச்'சுன்னு சொல்றீங்க? ரொம்ப உண்மை! மிக்க நன்றி உங்களுக்கு!//


    http://aaththigam.blogspot.com/2008/05/20.html

    ReplyDelete
  7. //http://aaththigam.blogspot.com/2008/05/20.html//

    இன்னா செய்யாமை பற்றிய சுட்டிக்கு ரொம்ப நன்றி அண்ணா!

    ReplyDelete
  8. யாரையும் காயப்படுத்தாமல் எதையும் சாதிக்கும் ஆயுதம்தானே அன்பு!

    //எடுக்க எடுக்க நிறையும்!
    கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  9. //உள்ளத்தை
    உணர்த்துகின்ற
    ஒலி வடிவே-
    மொழி என்றால்
    உலகம்
    உய்த்திருக்க
    ஒரு வழிதான்
    ஒரு மொழிதான்.
    அதுவே
    அன்பு மொழி.//

    வலைபூவில் என் முதல் பதிவின் முதல் வரிகள்! சமயம் கிடைக்கையில் சற்றே எட்டிப் பார்க்கலாம்!

    http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html

    ReplyDelete
  10. ஜீவா://இன்னா செய்தாரை நன்னயம்
    செய்திட பெருகாதோ அன்பு,
    அதை மறந்தபோது,
    தாழ்ந்ததே நம் பண்பு.//

    இன்னா செய்த நளினியிடம் இரக்கம் காட்டிப் நமக்கெல்லாம் பாடம் சொல்லிய பிரியங்காவின் பண்பினையும் 'பரிவுக்கரசி'எனும் என் பதிவிலே பார்க்கலாம்.
    http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_12.html

    தாங்கள்://எப்படி ஜீவா இப்படி 'நச்'சுன்னு சொல்றீங்க? ரொம்ப உண்மை! மிக்க நன்றி உங்களுக்கு!//

    ஒத்த அலைவரிசையில் நாம் இருப்பது போல் ஓர் உணர்வு.

    "அன்பும் பரிவும் உடைத்தாயின் நல் வாழ்க்கை
    பண்பும் பயனும் அது."

    ReplyDelete
  11. //யாரையும் காயப்படுத்தாமல் எதையும் சாதிக்கும் ஆயுதம்தானே அன்பு!//

    அழகா சொன்னீங்க, நிர்ஷன்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  12. //உள்ளத்தை
    உணர்த்துகின்ற
    ஒலி வடிவே-
    மொழி என்றால்
    உலகம்
    உய்த்திருக்க
    ஒரு வழிதான்
    ஒரு மொழிதான்.
    அதுவே
    அன்பு மொழி.//

    அழகான வரிகள், ராமலக்ஷ்மி! உங்க வலைப்பூவுக்குப் போய் நீங்க சொன்ன பதிவுகளைப் பார்க்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  13. அன்பின் கவிநயா,

    அன்பைப் பற்றிய அழகான கருத்தோடு அருமையான கவிதை :)

    அன்பு ஒன்றுதான் எந்தவித எதிர்பார்ப்புக்களுமற்றது.
    அன்பின் பாடல் இசைக்கப்படும் ஒவ்வொரு கணமும் உயிரொன்று புன்னகைக்கும்.வலிகளைச் சுருட்டித் தூர எறிந்து மகிழ்வைத் தன்னோடு போர்த்திக் கொள்ளும்.

    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)

    ReplyDelete
  14. வாங்க தம்பி!

    //அன்பின் பாடல் இசைக்கப்படும் ஒவ்வொரு கணமும் உயிரொன்று புன்னகைக்கும்.வலிகளைச் சுருட்டித் தூர எறிந்து மகிழ்வைத் தன்னோடு போர்த்திக் கொள்ளும்.//

    பின்னூட்டமே கவிதையா இருக்கே, கவிஞரே :) உண்மையை அழகா சொன்னீங்க. அன்புக்கு ஏங்காத ஜீவன் எது? எதிர்பார்ப்பில்லாத அன்புக்கு ஈடு இணை இல்லைதான்!

    நன்றி ரிஷான்!

    ReplyDelete
  15. அன்பு ஒரு அக்ஷயப்பாத்திரம் னு அழகா சொன்னீங்க! அருமையான கருத்தை எளிமையா ஆனால் தெளிவா சொல்லியிருக்கீங்க!

    வாழ்த்துக்கள்!

    -மீனா

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மீனா!

    ReplyDelete
  17. //அன்பு அது ஒரு அட்சய பாத்திரம் //
    எளிமையான நளினமான பெரும்பாலும் மெல்லினச் சொற்களிலே
    இது போன்ற கவிதை எழுதினால் நான் மெட்டமைக்காமல் இருக்கமுடியுமா என்ன ?

    உங்களது கந்தா கடம்பா பாட்டுக்கச்சேரிக்கு உரிய நேரத்தில் வர இயலவில்லை.
    இன்னொரு முருகன் கோவிலுக்குச் சென்றதில் அங்கு டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டது.
    இங்கு வருவதற்குள் இன்னொரு பதிவு இட்டுவிட்டீர்கள். அந்தப் பாடியவர்கள்
    மிகவும் நன்றாகப் பாடியிருக்கிறார்கள். அவர் எல்லோருக்கும் எங்களது
    ஆசிகளைத் தெரிவிக்கவும்.
    அதற்கு பின்னூட்டம்
    போடவில்லையே என்று இருக்கக்கூடாது என்று அதே ராகங்கள் கலவையில்
    (அதாவது பெளளி, சஹானா, அமீர்கல்யாணி, அடாணா, ரேவதி, ரீதி கெளள,
    ஹம்சனாதம், தேஷ் ) இந்தக் கவிதையை அமைக்கமுடியுமா என யோசிக்கிறேன்.


    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  18. கவிநயா அக்கா. அன்பைப் பற்றிய எளிய கவிதை. நன்றாக இருக்கிறது.

    ஆனால் அன்பை அவ்வளவு எளிதாக மற்றவரிடம் காட்ட இயலவில்லையே. ஒரே இறையின் அங்கங்கள் என்று மனத்திற்குச் சொல்லிக் கொண்டாலும் தன்னார்வம், தன்னன்பு இதனை விட மற்றவர் மேல் அன்பு அவ்வளவு எளிதாக எனக்கு அமைவதில்லை. :-(

    ReplyDelete
  19. 'அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன்னகை. ஒரு கன்னல் வார்த்தை. அதைப் பிறருக்குத் தருவதில் என்ன சிரமம்?'

    yes Kavithainee

    in around us only see selfish they are making one rule friendship means something expect next.

    That means this week I give party means they are expect next week onther one this is not friendship beyond that only business.

    when I read your poem what a real friendship I realised that line

    thank you

    puduvai siva.

    ReplyDelete
  20. அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன்னகை. ஒரு கன்னல் வார்த்தை. அதைப் பிறருக்குத் தருவதில் என்ன சிரமம்? //

    ஆமா கவிநயா அதான் பாரதி 'உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் 'என்றார்..அன்பே தொழிலாம்! எத்தனை அற்புதமான வார்த்தை!!! அன்பைப்பற்றிய எல்லாமே அருமையா இருக்கும் அப்புறம் இந்த உங்க பதிவுமட்டும் என்னவாம்? அருமை கவிநயா!

    ReplyDelete
  21. வாங்க, சுப்புரத்தினம் ஐயா! ட்ராஃபிக் ஜாம் (அதை எப்படி தமிழ்ல சொல்லணும்னு சொல்லுங்க குமரா! :) ஒரு வழியா முடிஞ்சிருச்சா? :) உங்க ஆசிகளை பாடகிகளுக்கு சொல்லிடறேன். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்களுக்கு இந்த கவிதை பிடிச்சிருப்பது எனக்கும் மகிழ்ச்சி. வழக்கமான உங்க உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும், நன்றி ஐயா!

    ReplyDelete
  22. வாங்க குமரா! வைத்ததொரு கல்வி மட்டும் மனப் பழக்கமில்லை; அன்பு செலுத்துவது கூட மனப் பழக்கம்தான்னு நம்பறேன் நான். நீங்க சொல்ற அந்த உணர்வு, விழிப்புணர்வு இருந்தாலே போதும். அதோட நீங்க மிகுந்த அன்பானவர்னு தெரியுமே! எதுக்கு இவ்வளவு கவலை? :)

    ReplyDelete
  23. வாங்க புதுவை சிவா! நீங்க சொன்னது சரிதான். உண்மையான நண்பர்களிடையே எதிர்பார்ப்பில்லாத அன்புதான் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. வாங்க ஷைலஜா! உங்கள இந்தப் பக்கம் பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி!

    //அன்பே தொழிலாம்! எத்தனை அற்புதமான வார்த்தை!!! //

    உண்மைதான். உங்க அன்புக்கு மிக்க நன்றி! :))

    ReplyDelete
  25. /எடுக்க எடுக்க நிறையும்!
    கொடுக்கக் கொடுக்கப் பெருகும்! /

    அன்பின் மொழிகள்

    அன்பு மழைப்பொழிந்து
    அகிலத்தை செழிக்க வைப்போம்

    ReplyDelete
  26. //அன்பு மழைப்பொழிந்து
    அகிலத்தை செழிக்க வைப்போம்//

    ஆம், திகழ்மிளிர். மிக்க நன்றி!

    ReplyDelete
  27. எளிமையான, அருமையான அன்பு பற்றிய கவிதை அருமை கவிநயா !

    ReplyDelete
  28. கருத்துக்கு நன்றி, சதங்கா!

    ReplyDelete
  29. //கவிநயா அக்கா. அன்பைப் பற்றிய எளிய கவிதை. நன்றாக இருக்கிறது. //

    ரீப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  30. வாங்க மௌலி! என்ன இருந்தாலும் உங்கள மாதிரி சூப்பரா யாராலயும் "ரிப்பீட்"ட முடியாது! அன்புக்கு ரொம்ப நன்றி! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)