Thursday, April 17, 2008

வசந்தம்

காட்டு மல்லி பூத்திருக்க
பார்க்குங் கண்கள் வியந்திருக்க
மீட்டுதடி மனசைத் தன்னாலே – வாசம்
இழுக்குதடி மூக்கை முன்னாலே!

வான வில்லின் நிறங்களிலே
வண்ணப் பூக்கள் சிரித்திருக்க
வண்டெல்லாம் மயங்கித் தள்ளாட - வசந்தம்
வந்ததடி வாழ்த்தி பண்பாட!

பொக்கி ஷமாய் மகரந்தம்
பூக்க ளுள்ளே ஒளிந்திருக்க
தென்றல் அதை அம்பலமாக்க – எங்கும்மஞ்சள்
படர்ந்ததடி பொன் விரிப்பாக!

மகரந்தம் போலே அன்பு
மன செல்லாம் நிறைந்திருக்க
தென்றலாகி நாம் அதை வீச - தரணியிலே
வாழ்வெல்லாம் என்றும் வசந்தமே!


--கவிநயா

2 comments:

  1. i am kalyankumar from chennai. film journalist and writer. i like to join ur sangam. pls visit my kalyanje.blogspot.com

    ReplyDelete
  2. கவிநயா,

    மாட்டுக்கார வேலவனை, மயக்கும் மல்லியாய், மகர்ந்தக் கசிவாய், வசந்தத்தினோடு வாழ்த்திய கவிதை மிக அருமை.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)